உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வடக்கு, கிழக்கில் மீண்டும் கனமழை: விவசாயிகளுக்கு அவசர அறிவுறுத்தல்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் மிதமானது முதல் சற்று கனமானது மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பில் அவர் இன்று(18.012026) வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கையின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு வளிமண்டலத்தில் உறுதியற்ற தன்மை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.இதன் காரணமாக எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இதேவேளை, இந்த காலப்பகுதியில் மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களுக்கும் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.எனவே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நெல் அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகளும், அறுவடை செய்த நெல்லை உலர விடும் விவசாயிகளும் இந்த மழை நாட்களைக் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், வெங்காயம் மற்றும் மரக்கறிச் செய்கையாளர்களும் இந்த மழை நாட்களைக் கருத்தில் கொள்வது சிறந்ததுஅத்துடன், தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் குளிரான நிலைமை அடுத்த சில நாட்களுக்கு சற்று அதிகரித்துக் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

49 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

22 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

38 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

46 0 0