உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

முல்லைத்தீவில் சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்படும் மரங்கள்: தடுக்குமாறு மக்கள் கோரிக்கை!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

முல்லைத்தீவு – விசுவமடு நாச்சிக்குடா பகுதியில் சட்டவிரோதமாக பெறுமதி மிக்க மரங்கள் வெட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.இது தொடர்பான முறைப்பாடுகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுகுடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஸ்வமடு பகுதியில் அண்மைக்காலமாக மக்கள் குடியிருப்பு பகுதிகள், பொது இடங்கள் மற்றும் நெத்தலி ஆறு பகுதிகளில் உள்ள மரங்கள் இரவு வேளைகளில் திருடப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், கடந்த 15ஆம் திகதி பொங்கல் தினத்தன்று வீட்டின் உரிமையாளரான 85 வயதுடைய முதியவர் சிகிச்சைக்காக உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.அப்போது, வீட்டு உரிமையாளருக்கு சொந்தமான காணியில் இருந்த பெறுமதியான முதிரை மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக முதியவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, குறித்த மரங்கள் நள்ளிரவு நேரத்தில் வெட்டப்பட்டு, உழவு இயந்திரத்தின் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் புதுகுடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.புது குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பாக விரைவாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறாதிருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் விசுவமடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

49 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

22 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

38 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

46 0 0