உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நந்தன குணதிலக்க மரணத்தில் ஏற்பட்டுள்ள பெரும் சர்ச்சை!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

முன்னாள் அமைச்சரும் ஜே.வி.பியின் தலைமை பதவியில் இருந்து விலகி ஐ.தே.கட்சியில் இணைந்து செயற்பட்ட நந்தன குணதிலக்க இயற்கை மரணமடையவில்லை.இது திட்டமிடப்பட்ட சூழ்ச்சிக் கொலை என பல சந்தேகங்கள் வெளிவந்துள்ளன.பிரபல ஊடகவியலாளர் கல்ப குணரத்தின சர்ச்சைகுரிய செய்தியை வெளியிட்டுள்ளார்.

அவரின் இணையதளத்தில் இது தொடர்பில் விரிவான செய்தியும் வெளியிட்டுள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,நந்தன குணதிலக்க தனது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பியுள்ள தகவல்களை மேற்கோள் காட்டியே இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.நந்தன குணதிலக்க அனுப்பியுள்ள செய்தியானது,

“கடந்த ஒரு வருட காலத்தில் ஜே.வி.பியின் அந்தரங்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் பொய்யான தகவல்கள், ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகள், கட்சியின் பொறுப்புணர்வு தொடர்பில் நான் மற்றும் வருன தீப்தி ராஜபக்ச மற்றும் பிரன்ஜித் விதாரன ஆகியோர் பல உண்மை தகவல்களை வெளியிட்டு விமர்சிப்பதால் எங்களை கொலை செய்வதற்காக ஜே.வி.பியின் கொலை கும்பல் மற்றும் அவர்களின் உதவிய அணியினர் எங்களை பின்தொடர்கின்றனர்.

அதற்காக செயற்படும் நபர்களின் திட்டங்கள் தொடர்பில் நாம் அறிவோம். அதற்கான ஆட்பலத்தை வழங்குவது பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆவார். அதனால் இதற்கு நீங்கள் தான் சாட்சியாளர்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் ஏதும் செய்தி போட்டீர்களாக என்று அவரிடம் கேட்டேன்.

அதற்கு அவர், இல்லை என்று சொன்ன அவர் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தூதுவராலயங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் குறுஞ்செய்தி ஒன்றையும் அனுப்பியிருந்தார்.நந்தன குணதிலக்கவுக்கு இன்றும் ஜே.வி.பியின் உள்ளக தொடர்புகள் இருப்பதாக வருண ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் பரிசோதனை நடத்துமாறும் மேலும் இருவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் உடன் நடவடிக்கை எடுக்குமாறும் ஊடகவியலாளர் கல்ப குணரத்ன வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

49 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

22 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

38 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

46 0 0