உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நாமலின் கூட்டத்தில் மதுபோதையால் நேர்ந்த அசம்பாவிதங்கள்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

ஜனாதிபதி அநுரவின் கிராமமான தம்புத்தேகம நகரில் நாமல் ராஜபக்ஷ ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்திற்குப் பின்னர் குடிபோதையில் கட்சி உறுப்பினர்கள் சுற்றித் திரிந்ததால் பொது மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளிம்பியுள்ளது.

வீதியில் குடிபோதையில் சிலர் விழுந்து கிடப்பதையும் மக்கள் அவதானித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.கடந்த வருடம் நவம்பரில் நுகேகொடை மற்றும் நேற்று (07.01.2026) தம்புத்தேகமவில் நடைபெற்ற பேரணியில் அதிக அளவில் மதுபானம் விநியோகிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

அந்தக் கூட்டங்களுக்கு அழைத்து வரப்பட்ட ஏழை மக்கள் குடிபோதையில் கைவிடப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன.இவ்வாறு மக்களைப் பயன்படுத்துவதற்கும் கைவிடுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து பல எதிர்ப்பு கருத்துக்கள் சமூகத்தில் வலுவடைந்துள்ளன.

அத்தோடு நாமல் ராஜபக்ச எம்.பி மேடையில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது மேடைக்கு அருகில் போதையில் சிலர் அதை திரும்ப உச்சரிப்பதான காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

47 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

22 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

38 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

45 0 0