உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பொற்பதி – மணல்காடு இணைப்பு வீதியை புணரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

யாழ்ப்பாணம் – வடமராட்சிக் கிழக்கு பொற்பதி – மணல்காடு இணைப்பு வீதியை புணரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணல்காடு கிராமத்திற்கும் பொற்பதி கிராமத்திற்கும் இடையேயான சுமார் 500 மீற்றர் விதி பல ஆண்டுகளாக புன்னரமைக்கப்படாமையால் பொற்பதி மற்றும் மணல் காடு கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பொற்பதி மற்றும் மணல்காடு கிராமங்கள் மீன்பிடி தொழிலை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இதனால் 500மீற்றர் வீதி சீரின்மை காரணமாக சுமார் 8 km தூரம் சுற்றி சென்று வருகின்றனர்.

மேலும், பொற்பதி ரோமன் காத்தோலிக்க பாடசாலையில் தரம் 9 வரையே வகுப்புக்கள் நடைபெறுகின்றன. மணல்காடு ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் க.பொ.த. உயர் தரம் வரை வகுப்புக்கள் நடைபெறுகின்றன. 

பொற்பதி பாடசாலையில் கற்கின்ற மாணவர்கள் 10, 11 மற்றும் உயர் தரங்களில் கல்வி கற்க வேண்டிய நிலையில் பருத்திதுறைக்கு சுமார் 12 km தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால் அந்த மாணவர்கள் இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.  ஆகையால் உரியவர்கள் இது குறித்து கவனமெடுத்து வீதியை சீர் செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

47 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

22 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

38 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

45 0 0