உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

போதைப்பொருட்களுடன் சிக்கிய இருவர்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

விற்பனைக்கு தயாரான நிலையில் வைத்திருந்த 2350 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 12 கிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் வேலணையில் இருவர் நேற்று (17) மாலை ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்படுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவின் ஆளுகைக்குள் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையை இல்லாதொழிக்கும் விசேட நடவடிக்கையை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்துவரும் நிலையில் தொடர்ச்சியாக பலர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஆனாலும் சிலர் இரகசியமான முறையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவருவது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் பரிசோதகர் வினோத்குமார் தலைமையிலான அணியினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விற்பனைக்கு தயாராக போதைப்பொருட்களை வைத்திருந்த வேலணை, திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தமக்கு நாச்சிக்குடாவில் இருந்து போதைப்பொருள் கிடைப்பதாக இருவரும் பொலிஸாரிடம் தெரிவித்த நிலையில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெருவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

48 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

22 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

38 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

45 0 0