மன்னார்–வில்பத்து–புத்தளம் பிரதான வீதி திறப்பில் அதிகாரிகளின் அலட்சியம் – சிவில் அமைப்புகள் குற்றச்சாட்டு.!
மன்னாரிலிருந்து வில்பத்து வழியாக புத்தளம் செல்லும் பிரதான வீதி தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ள போதிலும், பொறுப்பான அதிகாரிகளின் அலட்சியத்தால் வீதி திறப்பு நடவடிக்கை தாமதமாகி வருவதாக சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக இன்றைய தினம் (17) மன்னாரில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பிரதிநிதிகள், 2018ஆம் ஆண்டுக்குப் பின்னர் மூடப்பட்டுள்ள குறித்த வீதி பொதுமக்களின் போக்குவரத்து தேவைக்காக மீண்டும் திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
மாற்றுப் பாதையில் அதிக தூரமும் நேரமும் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த வீதி திறக்கப்படுவதன் மூலம் போக்குவரத்து சிரமங்கள் குறைந்து பொருளாதார நன்மைகள் கிடைக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.எனவே, மன்னார்–வில்பத்து–புத்தளம் பிரதான வீதியை மீண்டும் திறந்து பொதுமக்களின் இலகுவான போக்குவரத்திற்கு வழிவகுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.