உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

உடற்பிடிப்பு எனும் போர்வையில் விபச்சார விடுதி: நீதிமன்றின் அதிரடி உத்தரவு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

அனுமதிப்பத்திரமின்றி உடற்பிடிப்பு நிலையம் (Spa) என்ற போர்வையில் சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றை நடத்தி வந்த நிலையத்தின் முகாமையாளருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.பேலியகொட காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட குறித்த நிலையத்தின் முகாமையாளரை கொழும்பு மேலதிக நீதிவான் எச்.டி.டி.ஜே. பிரேமரத்ன முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போதே அவருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தச் சோதனையின் போது விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட நான்கு பெண்களுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதித்த நீதிவான், அவர்களை விடுவிக்க உத்தரவிட்டார்.பேலியகொட டயர் சந்திக்கு அருகில் நீண்டகாலமாக இந்தச் சட்டவிரோத தொழில் இடம்பெற்று வருவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, காவல்துறையினர் இந்தச் சோதனையை முன்னெடுத்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், கைது செய்யப்பட்ட பெண்களுக்கு பாலியல் ரீதியான நோய்கள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்து மருத்துவ அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறும் காவல்துறையினருக்கு நீதிவான் இதன்போது அறிவுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

17 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

36 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

42 0 0
இலங்கை செய்திகள்

மரம் வெட்டிக்கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த துயரம்.!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை எல்பட மேற்பிரிவு தோட்டப் பகுதியில் மரம் வெட்டிக்கொண்டிருந்த நபர் மீது பாரிய கிளையொன்று ஒன்று முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக நோர்வூட்…

58 0 0