உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு: ஜூலை முதல் நடைமுறைக்கு வரும் புதிய வாகன விதிமுறைகள்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் அலங்காரப் பொருட்களை அகற்றத் தவறும் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பிற வாகனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.இதுபோன்ற வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, வாகன ஆய்வாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ தடை உத்தரவுகளை பெறவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் அலங்காரப் பொருட்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதனிடையே, போக்குவரத்து விதிமுறைகளை மீறிய பின்னர், தப்பிச் செல்ல முயன்று பொலிஸ் அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஓட்டுநர்களுக்கு எதிராக, கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ், வழக்குத் தாக்கல் செய்ய பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீதி ஒழுங்குமுறையை மேம்படுத்தவும், போக்குவரத்து தொடர்பான குற்றங்களை குறைக்கவும் மேற்கொள்ளப்படும் விரிவான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வாகன ஓட்டுநர் உரிமங்களுக்கான குறைபாடு புள்ளிகள் முறை (Demerit Points System) அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

17 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

36 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

42 0 0
இலங்கை செய்திகள்

மரம் வெட்டிக்கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த துயரம்.!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை எல்பட மேற்பிரிவு தோட்டப் பகுதியில் மரம் வெட்டிக்கொண்டிருந்த நபர் மீது பாரிய கிளையொன்று ஒன்று முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக நோர்வூட்…

58 0 0