உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பல ரயில்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
17 பார்வைகள்

டிட்வா’ புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு நேர தபால் ரயில்கள் உட்பட பல ரயில்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை – திருகோணமலை இடையில் இரவு நேர தபால் ரயில் ஜனவரி 20 ஆம் திகதி முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தவும் கொழும்பு கோட்டை – மட்டக்களப்பு இடையில் ‘புலத்திசி’ நகர கடுகதி ரயிலும் தினமும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.உதய தேவி ரயில் சேவையையும் அனர்த்த நிலையின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை, புயலினால் சேதமடைந்த வடக்கு ரயில் மார்க்கத்தைப் புனரமைக்கும் பணிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன் காரணமாக மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை ரயில் சேவைகள் கொழும்பு கோட்டையிலிருந்து மஹவ வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. புனரமைப்புப் பணிகளின் பின்னர் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் விதம் குறித்து எதிர்காலத்தில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

17 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

36 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

42 0 0
இலங்கை செய்திகள்

மரம் வெட்டிக்கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த துயரம்.!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை எல்பட மேற்பிரிவு தோட்டப் பகுதியில் மரம் வெட்டிக்கொண்டிருந்த நபர் மீது பாரிய கிளையொன்று ஒன்று முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக நோர்வூட்…

57 0 0