உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்போருக்கு வெளியான விசேட அறிவிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை (2025)க்கான வீட்டுப் பொருளாதாரம் பாடம் தொடர்பான செயன்முறை பரீட்சை தொடர்பான சிறப்பு அறிவிப்பை இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அறிவிப்பின்படி, தொடர்புடைய செயன்முறை பரீட்சை 2026 ஜனவரி 24ஆம் திகதி முதல் 2026 பிப்ரவரி 02ஆம் திகதி வரை நாடு முழுவதும் நிறுவப்படவுள்ள 42 பரீட்சை மையங்களில் இடம்பெறவுள்ளன.

பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி பத்திரங்கள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் முதல்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி பத்திரங்கள் அவர்களின் விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபால் மூலம் அனுமதி பத்திரங்களை பெறாத விண்ணப்பதாரர்கள், 2026 ஜனவரி 19 முதல் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யத் தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரீட்சை தொடர்பான மேலதிக தகவல்களுக்கு, இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் பின்வரும் தொடர்பு ஊடகங்கள் மூலம் விசாரணைகளை மேற்கொள்ளலாம் என்றும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹாட்லைன்: 1911

தொலைபேசி: 011 2784208 / 011 2784537

ஃபேக்ஸ்: 011 2784422

மின்னஞ்சல்: gcealexam@gmail.com

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

17 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

36 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

42 0 0
இலங்கை செய்திகள்

மரம் வெட்டிக்கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த துயரம்.!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை எல்பட மேற்பிரிவு தோட்டப் பகுதியில் மரம் வெட்டிக்கொண்டிருந்த நபர் மீது பாரிய கிளையொன்று ஒன்று முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக நோர்வூட்…

57 0 0