உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கல்வி மறுசீரமைப்பு நிறுத்தப்படாது – பிரதமர் ஹரிணி அமரசூரிய.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
41 பார்வைகள்

நாட்டுக்குத் தேவையான மேம்பட்ட சமூகப் பிரஜையை உருவாக்கும் கல்வி முறைமையை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.கல்வி மறுசீரமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சிலாபம் கல்வி வலய அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கம் இந்த நாட்டைப் பொறுப்பேற்ற போது, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய மிக முக்கியமான துறையாகக் கல்வித்துறை இலக்கு வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.இவ்வாறான சமூக மாற்றங்களைச் செய்யும் போது சிலரின் எதிர்ப்புகள் எழக்கூடும் எனவும், எவ்வாறாயினும் சிறுவர் பாதுகாப்புக் கொள்கைக் கட்டமைப்பிற்குள் புதிய கல்வி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

தவறுகளை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்த்துக்கொண்டு செல்லும் புதிய கல்வி முறைமையில், சிறுவர்களுக்குத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது, சிறுவர் பாதுகாப்புக் கொள்கைகள் பாதுகாக்கப்படும் வகையில் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்.தொழிற்கல்விக்காக அதிகளவான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு இந்த கல்வி மறுசீரமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டது.

பாடசாலைகளுக்கு இடையில் நிலவும் டிஜிட்டல் சமத்துவமின்மை மற்றும் உட்கட்டமைப்பு வசதிப் பிரச்சினைகளை நீக்குவதற்காகத் தற்போது உரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.தரம் 6 கல்வி மறுசீரமைப்புகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியதன் மூலம் அநீதிக்குள்ளான மாணவர்களுக்கு விரைவில் நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். மாற்றத்தை நோக்கி கல்வியைக் கொண்டு செல்லும் இப்பயணத்தில், அதற்கான மக்களின் அங்கீகாரம் மிகவும் முக்கியமானது என்றும் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22 ஆவது திருத்தச் சட்டமூலம்; வெள்ளி மாலை வாக்கெடுப்பு.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு எதிர்வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு நடத்தப்படவுள்ளது. 22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல்…

82 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக யாழ்ப்பாண முஸ்லிம்களும் குரல் கொடுக்கின்றோம்.!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை விடுவிக்க வேண்டும் என்ற தேசிய மற்றும் சர்வதேச…

35 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையுடன் இந்து குருமார்கள் அவசர சந்திப்பு.!

சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அனோஜன் என்ற தமிழ் இளைஞருக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுத்து, அவரை மரண தண்டனையிலிருந்து பாதுகாப்பதற்குத் தலையிடுமாறு கோரி, இலங்கையின் முதன்மை இந்து…

80 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றில் நள்ளிரவில் திடீர் தீப்பரவல்.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி பளவெளிப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நள்ளிரவு வேளையில் திடீர் தீப்பரவல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இத் தீப்பரவலின் காரணமாக குறித்த…

85 0 0