உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சிறந்த பெண் தொழில் முயற்சியாளர் விருதில் இரண்டாம் மற்றும் மாகாண விருது முள்ளிப்பொத்தானை எம்.ஆர்.எம்.பிஸ்ரியாவுக்கு!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

பெண் தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கான சிறந்த விருது வழங்கும் நிகழ்வு  அண்மையில் கொழும்பு ஹில்டனில் இடம் பெற்றது.இதனை மகளிர் தொழில் முயற்சியாண்மை மற்றும் வர்த்தக சபை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் நடுத்தரளவு தொழில் உற்பத்தியில் ஈடுபட்டமைக்கு  தேசிய மட்டத்தில் இரண்டாம் இடமாக வெள்ளிப்பதக்கத்தையும்,மாகாண மட்ட விருதையும்  திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவை சேர்ந்த முள்ளிப்பொத்தானை எம்.ஆர்.எம்.பிஸ்ரியா பெற்றுக் கொண்டார்.

ஐந்தாண்டு கால வருட சராசரி வருமானம் அடிப்படையில் சிறந்து விளங்கும் பெண் தொழில் முயற்சியாளர்களுக்காக திறம்பட வருமானமீட்டி தமது தொழில் விருத்திகளை பெற்றமைக்காக குறித்த விருதுகள் வழங்கலில் தெரிவுகள் இடம் பெற்றது.

குறித்த பிஸ்ரியா எனும் பெண் பை (Bag) உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். தேசிய மட்டத்தில் இரண்டாமிடம் பெற்றமைக்காக ரூபா 100000.00 பெறுமதியான காசோலையும் கேடயமும்,மாகாண மட்ட விருதுக்கு ரூபா 75000.00 காசோலையும் கேடயமும் வழங்கி வைக்கப்பட்டன.   பாடசாலை பைகள்,பெண்களுக்கான பை உற்பத்தியில் சிறந்து விளங்கி வருகிறார் இதற்காகவே இவ் விருது கிடைக்கப்பெற்றது. 

இதனை கௌரவிக்கும் முகமாகவும் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகௌரி ஸ்ரீபதி (15) பிரதேச செயலகத்தில் வைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.இக் குறித்த பாராட்டு விழா நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்,நிருவாக உத்தியோகத்தர்,கணக்காளர் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இக் குறித்த பெண் சுயதொழில் முயற்சி ஊக்கிவிப்பு தொடர்பில் சிறந்த பயிற்சி வழங்குனராகவும்,போதனாசியராகவும் பணியாற்றி வருகின்றார்.இதற்கு முன்பும் பல பெண் சுயதொழில் முயற்சியாண்மையாளருக்கான விருதுகளை தனதாக்கிக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

35 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

41 0 0
இலங்கை செய்திகள்

மரம் வெட்டிக்கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த துயரம்.!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை எல்பட மேற்பிரிவு தோட்டப் பகுதியில் மரம் வெட்டிக்கொண்டிருந்த நபர் மீது பாரிய கிளையொன்று ஒன்று முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக நோர்வூட்…

56 0 0
இலங்கை செய்திகள்

அனைவரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.!

எம்மத்தியில் காணப்படுகின்ற வேறுபாடுளை களைந்து அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச்…

66 0 0