உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

 ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் செயற்பாடு யாழில் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
30 பார்வைகள்

இலங்கையின் தேசிய பேரழிவாக மாறியுள்ள நச்சுப் போதைப்பொருட்களிலிருந்து எமது சமூகத்தை விடுவிக்கும் நோக்கத்துடன், அரசால் முன்னெடுக்கப்படும் ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசிய செயற்பாடு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று நேற்று யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

“அகன்று செல்” என்ற தொனிப்பொருளில், யாழ். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு  நடைபெற்ற இம்மாபெரும் மக்கள் பேரணியில் ஜனாதிபதி, அமைச்சர்களுடன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனும் கலந்துகொண்டார்.

யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் ம.பிரதீபன் வரவேற்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் உரை ஆற்றினார்.

போதை ஒழிப்பு நடவடிக்கைகளில் மிகச் சிறப்பான செயற்பாடுகளை வெளிப்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்களைப் பாராட்டி, ஜனாதிபதி கௌரவிப்புக்களை வழங்கி வைத்தார்.

நிகழ்வின் மிக முக்கிய அம்சமாக, போதைப்பொருட்களிலிருந்து விலகி இருப்போம் எனவும், சமூகத்தைப் பாதுகாப்போம் எனவும் உறுதியளிக்கும் ‘சத்தியப்பிரமாணம்’ ஜனாதிபதி முன்னிலையில் ஆயிரக்கணக்கான மக்களால் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் கௌரவ அமைச்சர் ஆனந்த விஜயபால, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.றஜீவன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.மேலும், யாழ்ப்பாணம் மாவட்ட செயலர், மாவட்ட செயலக அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், பெருந்திரளான பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

41 0 0
இலங்கை செய்திகள்

மரம் வெட்டிக்கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த துயரம்.!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை எல்பட மேற்பிரிவு தோட்டப் பகுதியில் மரம் வெட்டிக்கொண்டிருந்த நபர் மீது பாரிய கிளையொன்று ஒன்று முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக நோர்வூட்…

55 0 0
இலங்கை செய்திகள்

அனைவரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.!

எம்மத்தியில் காணப்படுகின்ற வேறுபாடுளை களைந்து அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச்…

66 0 0
இலங்கை செய்திகள்

கடற்கரையில் கரையொதுங்கிய ச*டலம்.!

காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை (24) கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல்…

28 0 0