உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பிரித்தானியாவில் படுகொ*லை செய்யப்பட்ட ஈழத்தமிழ் பெண் – விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

பிரித்தானியாவின் லிவர்பூலில் கடை ஒன்றில் இலங்கை பெண்ணான தனது மனைவியை கொலை செய்த இலங்கையருக்கு 29 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.லிவர்பூல் கிரவுன் நீதிமன்றில் நேற்று வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட 44 வயது மனைவி நிலானி நிமலராஜாவை கத்தியால் 18 முறை குத்திக் கொன்ற நிமலராஜா மதியாபரணம் என்ற 47 வயதுடைய இலங்கையருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூன் மாதம் 20ஆம் திகதி நடந்த கொடூர கொலைக்கு, கொலையாளியான இலங்கையருக்கு குறைந்தது 29 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

\தனது இரண்டாவது மகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற கோபத்தில் பிரிந்திருந்த மனைவியை கொடூரமாக கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.ஏற்கனவே குடும்ப வன்முறை காரணமாக நிலானியையும் மூத்த மகளையும் தொடர்பு கொள்ளக் கூடாது என நீதிமன்றம் அவருக்குத் தடை விதித்திருந்தது.

கொலை செய்வதற்கு முன்பு அஸ்டா சூப்பர் மார்க்கெட்டில் முகமூடி அணிந்து கத்திகளை வாங்கிய அவர், பின்னர் மனைவி வேலை செய்த கடைக்குச் சென்று இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். இந்தச் செயலால் மூன்று பிள்ளைகள் அனாதையாக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனைவரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.!

எம்மத்தியில் காணப்படுகின்ற வேறுபாடுளை களைந்து அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச்…

64 0 0
இலங்கை செய்திகள்

கடற்கரையில் கரையொதுங்கிய ச*டலம்.!

காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை (24) கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல்…

28 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய வடமராட்சி, துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இந்த…

64 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போன வைத்தியர் ச*டலமாக மீட்பு.!

காணாமல்போன பதுளை வைத்தியசாலையின் மயக்கவியல் வைத்திய நிபுணரின் சடலம், மஹியங்கனை – மாபாக்கடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறை ஒன்றின் மீது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

72 0 0