உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு எம்.பி. இளங்குமரனுக்கு அழைப்பாணை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
30 பார்வைகள்

தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை எதிர்வரும் 20ம் திகதி நீதிமன்றில் முன்நிலையாகுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் இன்று அழைப்பாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்டு, பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களுக்கு சுகாதார பரிசோதகரின் அனுமதி இன்றி உணவு வழங்க முற்பட்ட சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த சம்பவத்தின்போது கிராம சேவையாளர் மீது நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிராமசேவையாளர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று நீதிமன்றத்தில் முன்நிலையாகியிருந்தார்.அத்துடன் வழக்கு எதிர்வரும் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனைவரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.!

எம்மத்தியில் காணப்படுகின்ற வேறுபாடுளை களைந்து அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச்…

64 0 0
இலங்கை செய்திகள்

கடற்கரையில் கரையொதுங்கிய ச*டலம்.!

காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை (24) கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல்…

28 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய வடமராட்சி, துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இந்த…

64 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போன வைத்தியர் ச*டலமாக மீட்பு.!

காணாமல்போன பதுளை வைத்தியசாலையின் மயக்கவியல் வைத்திய நிபுணரின் சடலம், மஹியங்கனை – மாபாக்கடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறை ஒன்றின் மீது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

72 0 0