போதைப்பொருள் வியாபாரம் வங்கிக் கணக்குகள் மூலம் அம்பலம்.!
இரண்டு சந்தேக நபர்களின் சந்தேகத்திற்கு இடமான கொடுக்கல் வாங்கல்கள் மத்திய வங்கி மூலம் அவதானிக்கப்பட்டதை அடுத்து குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணைகளின் போது கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதன் மூலம் இந்த பணம் இவர்களது கணக்கில் வைப்பில் இடப்பட்டுள்ளமை விசாரணைகள்
மூலம் தெரிய வந்துள்ளது.
இவர்களிடமிருந்து வேன், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. இவை போதைபொருள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.