உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மீண்டும் இனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

“இலங்கையில் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கு சிலர் முற்படுகின்றனர். அதற்கு இடமளிக்கமாட்டோம். இனவாதம் நிச்சயம் தோற்கடிக்கப்படும்.” – இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றித் தவிக்கும் 2 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான பிரதான நிகழ்வு யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மீசாலையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“போரின்போது வடக்கில் பல வீடுகள் சேதமடைந்தன. இவ்வாறு சேதமடைந்த வீடுகள் இன்னும் முழுமையாக மீளமைக்கப்படவில்லை.

போர்க் காலத்திலும் இடம்பெயர்ந்து வாழ்ந்தனர். தற்போதும் இடம்பெயர்ந்து வாழ வேண்டிய நிலை. தமக்கென வீடொன்று இன்மையே இதற்கு பிரதான காரணமாகும்.

எனவே, போரால் இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கும் வீடில்லாப் பிரச்சினைக்கு எமது ஆட்சியின் கீழ் தீர்வு காணப்படும்.” – எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எம் மீது நம்பிக்கை வைத்தே வடக்கு மக்கள் வாக்களித்தார்கள். அந்த நம்பிக்கையை சிதைக்கும் வகையில் நாம் செயல்படமாட்டோம். ஏனெனில் இது மக்களுக்கான அரசாங்கமாகும்.

அதேவேளை, இனவாதம் என்பது இந்நாட்டுக்கு அழிவையே தந்துள்ளது. இதன்மூலம் எவ்வித நன்மையும் கிட்டவில்லை. மக்கள் மத்தியில் துயரங்களே குவிந்தன.

தற்போதும் அரசியலுக்காக இனவாதப் பிரச்சினையை தோற்றுவிப்பதற்கு சிலர் முற்படுகின்றனர். நாம் இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனைவரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.!

எம்மத்தியில் காணப்படுகின்ற வேறுபாடுளை களைந்து அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச்…

52 0 0
இலங்கை செய்திகள்

கடற்கரையில் கரையொதுங்கிய ச*டலம்.!

காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை (24) கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல்…

24 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய வடமராட்சி, துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இந்த…

59 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போன வைத்தியர் ச*டலமாக மீட்பு.!

காணாமல்போன பதுளை வைத்தியசாலையின் மயக்கவியல் வைத்திய நிபுணரின் சடலம், மஹியங்கனை – மாபாக்கடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறை ஒன்றின் மீது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

70 0 0