உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வெளிநாடுகளில் தலைமறைவாகி உள்ள குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

வெளிநாடுகளில் தலைமறைவாகி உள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில் சிவப்பு எச்சரிக்கை மூலம் 10 சந்தேக நபர்களும், 2025 ஆம் ஆண்டில் 11 சந்தேக நபர்களும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அந்தவகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் 21 சந்தேக நபர்களை இலங்கைக்கு கொண்டு வர முடிந்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து குற்றச் செயல்களை முன்னெடுத்து வரும் குற்றவாளிகள் பலரை நாம் அடையாளம் கண்டுள்ளோம்.

அதன் ஒரு கட்டமாகவே இன்று ஐக்கிய அரபு இராச்சியம், அபுதாபி சர்வதேச பொலிஸ், டுபாய் பொலிஸ் மற்றும் தூதரகங்களின் உதவியுடன் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

கைதானவர்கள் பல கொலைச் சம்பங்கள் மற்றும் நிதி மோசடியுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனைவரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.!

எம்மத்தியில் காணப்படுகின்ற வேறுபாடுளை களைந்து அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச்…

5 0 0
இலங்கை செய்திகள்

கடற்கரையில் கரையொதுங்கிய ச*டலம்.!

காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை (24) கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல்…

23 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய வடமராட்சி, துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இந்த…

59 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போன வைத்தியர் ச*டலமாக மீட்பு.!

காணாமல்போன பதுளை வைத்தியசாலையின் மயக்கவியல் வைத்திய நிபுணரின் சடலம், மஹியங்கனை – மாபாக்கடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறை ஒன்றின் மீது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

69 0 0