உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பண்டிகைக் கால முற்பணத் தொகை! அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

அரச ஊழியர்களுக்கான வழங்கப்படும் பண்டிகைக் கால முற்பணத் தொகையை அதிகரிப்பது தொடர்பான சுற்றறிக்கையை அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.

நேற்று (13) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த முற்பணத் தொகையை 15,000/- ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

அரச அதிகாரிகளுக்கு பண்டிகைக் கால முற்பணம் வழங்குவது தொடர்பான தாபனக் கோவையின் விதிகளுக்கமைய, தைப்பொங்கல், ரமழான், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி மற்றும் நத்தார் போன்ற பண்டிகைகளுக்காகவும், புனித யாத்திரைகளுக்காகவும் (ஸ்ரீ பாத யாத்திரை மற்றும் ஹஜ் யாத்திரை போன்றவை) தற்போது 10,000/- ரூபாய் முற்பணமாகப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது.

இந்த முற்பணத் தொகையை வட்டியின்றி 8 மாதத் தவணைகளில் அல்லது தேவைப்படின் அதற்கு முன்னதாகவோ மீளச் செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.குறித்த பண்டிகைக் கால முற்பணத் தொகையை 15,000/- ரூபாய் வரை அதிகரிப்பதற்கு 2026 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டிருந்ததுடன், அதற்கான சுற்றறிக்கையே தற்போது அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

31 0 0
இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

80 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

50 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

66 0 0