உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பிரபல பாடசாலைக்கு மாணவியை சேர்த்துக் கொள்ள லஞ்சம் பெற்றவருக்கு நேர்ந்த கதி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றுக்கு மாணவியை முதலாம் ஆண்டில் சேர்த்துக் கொள்வதற்காக லஞ்சம் பெற்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு லட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், ஓய்வுபெற்ற கடற்படை மருத்துவ உதவியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், திம்பிரிகஸ்யாய பகுதியில் வைத்து சந்தேக நபர் இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பில் உள்ள பெண்கள் பாடசாலையில் இந்தாண்டில் முதலாம் தரத்தில் சேர்க்க லஞ்சம் கோரியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூன்று சந்தர்ப்பங்களில் ஒரு லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, மீதமுள்ள இரண்டு லட்சம் ரூபாவை பெற முயன்ற போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

31 0 0
இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

80 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

50 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

66 0 0