உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

யாழில் காதலனுக்கு அதிர்ச்சி கொடுத்த காதலி – பழிவாங்க செய்த மோசமான செயல்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

யாழ்ப்பாணத்தில் தனது முன்னாள் காதலனின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில் வசிக்கும் 25 வயது இளம் கணினி பொறியாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது நிர்வாண புகைப்படங்கள் வட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டதாகவும், அது அவரது முன்னாள் காதலியால் செய்யப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.அதற்கமைய, வடக்கு மாகாண குற்ற புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், முன்னாள் காதலியின் செயற்பாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் முறைப்பாட்டாளருடன் சுமார் 15 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்ததாக தெரியவந்துள்ளது.தனது காதலனை பிரிந்ததால் அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், வேதனையடைந்ததாகவும் அதனால் பழிவாங்கும் நோக்கில் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

யாழ். நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.இது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

31 0 0
இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

80 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

50 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

66 0 0