உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

உலகின் மிக விலையுயர்ந்த கார் மைத்திரி குடும்பத்தில்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

நாட்டின் முன்னணி வர்த்தகரான அரலிய குழுமத்தின் தலைவரான டட்லி சிறிசேன, உலகின் மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.

உலக பிரபலமான ரோல்ஸ் ரொய்ஸை காரை கொள்வனவு செய்து நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.

ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனத்தின் அதன் 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக நிறுவனத்தால் Phantom Centenary Edition ரகத்தை சேர்ந்த 25 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன.

அந்த 25 கார்களின் ஒன்றை டட்லி சிறிசேன வாங்கியுள்ளார். டட்லி சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் பணக்காரர்கள் மாத்திரம் வாங்கக் கூடிய ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனத்தின் பேண்டோம் காரை வாங்கியுள்ளமை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

அதன்படி, அவர் குறித்த பதிவில்,
“சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, மிகக் குறைந்த பணத்துடனும், தனது மனைவியின் தங்க நகைகளை அடகு வைத்துத் திரட்டிய நிதியுடனும் ஒரு சிறிய லொறியை வாங்கினேன்.

42 ශ්‍රී 1762 என்ற இலக்கத் தகட்டைக் கொண்ட அந்த லொறிதான், இன்றைய ‘அரலிய’ வர்த்தக சாம்ராஜ்யத்தின் அடித்தளம். ஆரம்பத்தில் பல கஷ்டங்களை அனுபவித்த போதிலும், இலக்கை அடையும் வரை நான் ஓயவில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.

அவர் வாங்கிய Rolls Royce Phantom சொகுசு காருடன், தனது பழைய லொறியின் கதையையும் ஒப்பிட்டு, வெற்றி என்பது வெறும் அதிர்ஷ்டம் அல்ல, அது தொடர்ச்சியான உழைப்பின் பலன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அரிசி உற்பத்தியில் டட்லி சிறிசேன பிரபலமான ஒரு தொழிலதிபர் ஆவார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

28 0 0
இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

78 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

48 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

64 0 0