உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிய நடமாடும் ஆய்வுகூடம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்காக நடமாடும் ஆய்வுகூடம் ஒன்று தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார்.

போதைப்பொருள் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 7,000 இற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஒருவர் மது அருந்துவதென்றால் அது அவருடைய உரிமை, நாங்கள் வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் மது அருந்துவதாயின், விசேடமாக மது அருந்தாத ஒருவரை அழைத்துச் செல்லுங்கள். இல்லையெனில் வாடகை வாகன சேவையையைப் பயன்படுத்துங்கள். அல்லது வேறொரு சாரதியை ஏற்பாடு செய்யுங்கள் என நாம் தெளிவாக அறிவுறுத்தியுள்ளோம்.

கடந்த வருடம் வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் 31% ஆனோர் பாதசாரிகள் ஆவர். அதேபோல் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் 31% ஆகவும், பின்னால் அமர்ந்து சென்றவர்கள் 7% முதல் 8% ஆகவும் உள்ளனர்.

போதைப்பொருள் பரிசோதனைக்காகத் தற்போது ஒரு தொகுதிக்கு அனுமதி கிடைத்துள்ளது. தேசிய மருத்துவ நிறுவகத்திடம் இப்போது ஒரு நடமாடும் ஆய்வுகூடம் உள்ளது. அது ஹெரோயின், கஞ்சா, பாபுல், ஐஸ் ஆகிய 4 வகையான போதைப்பொருட்களைப் பரிசோதிக்கும் வசதியைக் கொண்டது. தற்போது அந்த மருத்துவ வாகனத்தையும் இணைத்துக்கொண்டு சோதனைகளை முன்னெடுத்துள்ளோம்.

எனவே போதைப்பொருள் மற்றும் மதுபோதையில் இருக்கும் சாரதிகள் மீது சட்டம் கடுமையாகப் பாயும்.” என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

28 0 0
இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

78 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

48 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

64 0 0