உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பத்து நிமிடம் மழை பெய்தால் போதும் வெள்ள நீர் தேங்கும் சாய்ந்தமருது பெண்கள் சந்தை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

10 நிமிடம் மழை பெய்தால் போதும் வெள்ள நீர் தேங்கும் பிரதேசமாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது பெண்கள் சந்தை (பொம்பிளை சந்தை – உள்ளூரில் அழைக்கப்படும் பெயர்) ஆகும்.

இன்று மட்டுமல்ல பருவ காலத்தில் கூட அடிக்கடி வெள்ள நீரினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்ற சந்தைப் பகுதியாகவும் இச் சந்தையை சூழ உள்ள மாநகர சபைக்கு உட்பட்ட உள் வீதிகளும் வெள்ள நீரில் மூழ்குவதை அவதானிக்க முடிகின்றது.

வெள்ள நீரால் சந்தைக்கு வரும் மக்களை சிரமங்களுக்குள் உள்ளாவதுடன் விபத்துக்கள் ஏற்படவும் காரணமாக அமைகின்றன.

அத்துடன் இச் சந்தையை சுற்றி உள் வீதிகளில் காணப்படும் வடிகான்கள் நீண்ட காலமாக தூர்வாரப்படாமையினால் நீர் தேங்கி வெள்ள நிலைமை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இது தவிர குறித்த சந்தை மேற் கூரையும் எவ்வித கவனிப்பாரற்று காணப்படுவதனால் பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் காணப்படுவதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

அத்துடன் சந்தைப் பகுதிக்குள் தொடர்ச்சியாக வெள்ளம் தேங்கி நிற்பதால் துர்நாற்றமும் வீசுவதுடன் சுகாதார அச்சுறுத்தலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

28 0 0
இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

78 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

48 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

64 0 0