உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
33 பார்வைகள்

எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நாட்டில் பச்சரிசி மற்றும் நாட்டரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக மரதகஹமுல சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் தெரிவித்தார்.

தற்போதைய சந்தை நிலவரம் குறித்து அவர் மேலும் கூறியதாவது:
“இன்றைய நிலவரப்படி மரதகஹமுலவில் முதல் தர நாட்டரிசி ஒரு கிலோவின் மொத்த விலை அதிகபட்சம் 225 ரூபா வரை உள்ளது.

வெள்ளை பச்சரிசி 208 முதல் 212 ரூபா வரையிலும், சிவப்பு அரிசி வகைகள் 205 முதல் 210 ரூபா வரையிலும் விற்பனையாகின்றன.

இருப்பினும், சம்பா மற்றும் கீரி சம்பா மிக அதிக விலையில் உள்ளன. கீரி சம்பா 340 ரூபாவையும், சம்பா 260 ரூபாவையும் கடந்து செல்கின்றன.

சம்பா மற்றும் கீரி சம்பா அரிசியின் விலை அதிகரிக்கும் போது, விவசாயிகள் அவற்றை பயிரிடச் செல்வதால் வெள்ளை பச்சரிசி மற்றும் நாட்டரிசிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும்.

ஆகையால் நெல் விலை அதிகரிப்பதாயின், இந்த மூன்று வகைகளுக்கும் விவசாயிகளுக்கு நியாயமான விலை வழங்கப்பட வேண்டும்.

பண்டிகைக் காலத்தில் சம்பா மற்றும் கீரி சம்பா விலைகள் மேலும் அதிகரிக்கலாம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

28 0 0
இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

78 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

48 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

64 0 0