உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ராஜபக்ஷ குடும்பத்தின் வரலாறு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு விட்டது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகிக்கக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,
ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியலை மக்கள் ஏற்கனவே நிராகரித்து விட்டார்கள். அவர்களுடைய வரலாறு தற்பொழுது குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு விட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு எவ்வித சந்தர்ப்பமும் கிடையாது.

நாமல் ராஜபக்ச ஜனாதிபதியானால் புதிய மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என கூறப்படும் கருத்துக்கள் நகைப்பிற்குரியவை.

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டும் தீவிர சேறு பூசல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெண்களை இழிவுபடுத்தக்கூடிய வகையில் ராஜபக்ஷ – ரணில் விக்மரமசிங்க மிக இழிவான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

எனினும் கல்வி அரசியலமைப்பு நடவடிக்கைகள் திறந்த வெளிப்படை தன்மையுடன் கூடிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

கல்வி வணிக மயப்படுத்தப்படுவதனை வன்மையாக கடுமையாக எதிர்ப்பதாகவும், குறிப்பாக பாடசாலைகளை மூடும் திட்டம் ஏற்புடையது அல்ல எனவும் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

60 0 0
இலங்கை செய்திகள்

இராணுவத்திடமிருந்து காணிகளை மீட்க சர்வதேச சமூகத்தினர் தலையிட வேண்டும்.!

ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம்…

49 0 0
இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

76 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0