உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நான்கு பிள்ளைகளின் தாய் உயிர்மாய்ப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள தோத்தல்ல தனியார் தோட்டத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

52 வயது மதிக்கத்தக்க தோதல்ல தோட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின்னர் நாளாந்த வேலை அடிப்படையில் பணிபுரிந்து வந்த பெண் இவ்வாறு தூக்கிட்டு கொண்டதாக கிடைக்கபெற்ற தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் நேரில் வந்து பார்வை இட்ட பின்னர் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

60 0 0
இலங்கை செய்திகள்

இராணுவத்திடமிருந்து காணிகளை மீட்க சர்வதேச சமூகத்தினர் தலையிட வேண்டும்.!

ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம்…

49 0 0
இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

76 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0