சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து; மூவர் உயிரிழப்பு.!
புத்தளம், முந்தல் – நவதன்குளம் பகுதியில் இன்று (12) திங்கட்கிழமை காலை கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்தால் கார் மற்றும் வேனின் முன் பகுதிகள் பெரும் சேதமடைந்துள்ளன.
விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

