உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டவர்கள் சிக்கினர்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

முச்சக்கரவண்டிகளைத் திருடி அவற்றின் இயந்திரங்கள் மற்றும் செஸி இலக்கங்களை மாற்றியும், வர்ணங்களை மாற்றியும் மீண்டும் விற்பனை செய்து வந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் அங்குருவெல்ல மற்றும் குருவிட்ட பகுதிகளைச் சேர்ந்த 28 முதல் 43 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பகுதியில் நபரொருவர் தமது முச்சக்கரவண்டி திருடப்பட்டதாக வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், நுகேகொடையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணையின் போதே சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.

அவர்களிடமிருந்து சட்டவிரோதமாக மாற்றம் செய்யப்பட்ட 11 முச்சக்கரவண்டிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

பலாங்கொடை, பதுளை, பத்தரமுல்ல மற்றும் மிரிஹானை ஆகிய பகுதிகளில் இருந்து குறித்த முச்சக்கரவண்டிகள் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளை தலா 12 முதல் 13 இலட்சம் ரூபாய் வரையான விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாளை (12) நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

60 0 0
இலங்கை செய்திகள்

இராணுவத்திடமிருந்து காணிகளை மீட்க சர்வதேச சமூகத்தினர் தலையிட வேண்டும்.!

ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம்…

49 0 0
இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

76 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0