பொங்கல் தினத்தன்று யாழ். வரும் ஜனாதிபதி; பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பார்.!
தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி, 15ஆம் திகதி மதியம் 2 மணியளவில் வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணியம் சுவாமி கோவில் முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.
பின்னர் அங்கிருந்து மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் மாலை 4 மணியளவில் கலந்துகொள்ளவுள்ளார்.
மறுநாள் 16ஆம் திகதி காலை 9 மணிக்கு மீசாலை ஆரம்ப பாடசாலையில் வீட்டுத் திட்டப் பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்வார்.
பின்னர் மதியம் 2 மணியளவில் கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரி மைதானத்தில் “முழு நாடும் ஒன்றாக…” போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.