மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!
ரஸ்நாயக்கபுர – தலாகொலவேவ பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வன்னி – ரஸ்நாயக்கபுர பகுதியைச் சேர்ந்த 75 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
வன விலங்குகளிடமிருந்து தனது பயிர்களைப் பாதுகாக்க, சட்டவிரோதமாக கட்டப்பட்ட மின்சார கம்பியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ரஸ்நாயக்கபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.