சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் வேண்டிகோனர் சந்தியில் இன்று (11) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உந்துருளியுடன் லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் உந்துருளி ஓட்டுநர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நுவரெலியா பொரளாந்த பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற உந்துருளி எதிர் திசையில் ஹட்டன் பகுதியில் இருந்து நுவரெலியா பீட்ரு நோக்கி சென்று கொண்டிருந்தது மீது மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் உந்துருளியும் பலத்த சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பான விசாரணையை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
