உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு – அச்சுறுத்தும் புதிய புள்ளிவிபரம்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
21 பார்வைகள்

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதி பணிப்பாளர் மருத்துவர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார்.இதன்படி ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று (09) வரையான 9 நாட்களில் மாத்திரம் நாடு முழுவதும் 2,420 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.மேலும் தென் மாகாணத்தில் 361 டெங்கு நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 192 நோயாளர்களும் பதிவாகியுள்ளதுடன் சபரகமுவ மாகாணத்தில் 165 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய அதிகபடியான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.இதன்படி கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 165 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 393 நோயாளிகளும், களுத்துறை மாவட்டத்தில் 128 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.கூடுதலாக, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கணிசமான எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதன்படி, காலி மாவட்டத்தில் 148 டெங்கு நோயாளிகளும், மாத்தறை மாவட்டத்தில் 162 டெங்கு நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.இதே நேரத்தில், கண்டி மாவட்டத்தில் 140 நோயாளிகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் 113 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த மாவட்டங்களில் கவனம் செலுத்த வேண்டிய அளவில் டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.எதிர்வரும் காலங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குறித்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

76 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

79 0 0