உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

முஸ்லிம் அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை: அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
21 பார்வைகள்

குறிப்பிட்ட அரசு ஊழியர்களுக்கான ரமலான் கால சிறப்பு விடுமுறை குறித்த அரசு சுற்றறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.குறிப்பிட்ட அரசு ஊழியர்களுக்கு 2026 ரமலான் கால சிறப்பு நடைமுறை மற்றும் விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு ரமலான் மாதம் பிப்ரவரி 19ம் திகதி தொடங்கி மார்ச் மாதம் 21ம் திகதி முடிவடைய உள்ள நிலையில், இந்த காலத்தில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு அவர்களுக்கான தொழுகை மற்றும் மத வழிபாடுகளில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருவது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் அரசு ஊழியர்கள் அவர்களின் அலுவலக நேரங்களில் சமய வழிபாடுகளில் கலந்து கொள்வதற்கு ஏற்ற வேலை நேரங்களை ஒழுங்கு செய்து கொடுத்தல் மற்றும் தவிர்க்க முடியாத நேரங்களில் அவர்களுக்கான சிறப்பு விடுமுறை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ரமலான் பெருநாளில் இறுதித் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னதாகவே அரசு மற்றும் நிதியச்சட்ட சபைகள் ஆகியவற்றில் பணிபுரியும் முஸ்லிம் ஊழியர்களுக்கான விழா முற்பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

76 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

79 0 0