உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அர்ச்சுனா எம்.பி யை கிழித்து தொங்கவிட்ட கௌசல்யா!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
21 பார்வைகள்

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபையில் நடந்துகொள்ளும் விதம் குறித்து ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளதுடன், ஏனைய உறுப்பினர்களிடம் இருந்து நாடாளுமன்ற ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கினார்.

நாடாளுமன்றத்தில் கூச்சலிடுவதும், சிற்றுண்டிச்சாலைக்குச் சென்று சாப்பிடுவதும் மாத்திரம் ஒரு மக்கள் பிரதிநிதியின் பணி அல்ல என்பதை அர்ச்சுனா எம்.பி புரிந்துகொள்ள வேண்டும் எனச் சாடியுள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (09) நடைபெற்ற விவாதத்தின் போது உரையாற்றிய பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன ,

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், காலையில் இருந்தே சபையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக தெரிவித்த அவர் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய உறுப்பினர்களிடம் இருந்து ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ளுமாறும் கூறினார் .

புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக திட்டமிட்ட முறையில் சில தரப்பினர் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, பிரதமர் ஹரினி அமரசூரிய மீது அரசியல் நோக்கில் மிக மோசமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகவும், இது முறையான விசாரணைகளைத் திசைதிருப்பும் முயற்சி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார, பிரதமர் மீது மிகவும் கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைத்ததாகக் குறிப்பிட்டார்.வார்த்தைப் பிரயோகங்கள் மற்றும் சைகைகள் மூலம் பிரதமரை அவர் இழிவுபடுத்திய விதம் கண்டிக்கத்தக்கது என்றும், எதிர்க்கட்சியில் உள்ள பெண் உறுப்பினர்கள் இத்தகைய கீழ்த்தரமான செயல்களை ஏற்றுக்கொள்கிறார்களா? என்றும் கேள்வி எழுப்பினார்.

பிரதமருக்கு எதிரான இத்தகைய தனிப்பட்ட தாக்குதல்கள் அரசியல் நாகரிகமற்றவை என அவர் கடுமையாகச் சாடினார். நாடாளுமன்ற நிலையியல் கட்டளைப் புத்தகத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு சபையை வழிநடத்திவிட முடியாது என்றும், மக்கள் நலன் சார்ந்த விவாதங்களில் கண்ணியத்துடன் கலந்துகொள்வதே சிறந்தது என்றும் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்தார்.

மேலும் அர்ச்சுனா இராமநாதன் போன்ற உறுப்பினர்கள் சபையின் கௌரவத்தைப் பேணக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன வலியுறுத்தினார்.அதேசமயம் சபையில் ஏற்பட்ட இத்தகைய மோதல் போக்கு மற்றும் காரசாரமான விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

76 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

79 0 0