உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
9 வெள்ளி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வடக்கு கடற்றொழிலாளர்கள் திண்டாட்டத்தில்! பொங்கல் கொண்டாட யாழ் வரும் ஜனாதிபதி.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
34 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பொங்கல் தினம் கொண்டாட யாழ் வருகின்றார் ஆனால் எமது வடக்கு கடற்றொழிலாளர்கள் திண்டாட்டத்தில் இருப்பதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவர் இ.முரளிதரன் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

வடமராட்சிக் கிழக்கில் அண்மைய நாட்களாக இந்திய இழுவை மடி படகுகள் சுதந்திரமாக,எந்தவித கைது அச்சமும் இன்றி தொழில் செய்து வருகிறார்கள் கரைக்கு அண்ணளவாக வந்து கடற்படை தளத்திற்கு அருகில் பயமின்றி துணிச்சலாக எப்படி அவர்களால் தொழில் செய்ய முடிகின்றது?எங்களுடைய கடற்றொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கின்றது, கடற்படை அவர்களை கைது செய்யவில்லை. அண்மையில் கூட இந்திய துணை தூதுவரை சந்தித்து கடற்றொழிலாளர்கள் உடைய பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடி இருந்தோம்.

ஆனாலும் இதுவரை இந்த பிரச்சனைகளுக்கான முடிவு எட்டப்படவில்லை இலங்கை கடலுக்குள் அத்துமீறி நுழைந்து எங்களுடைய வளங்களை அவர்கள் சுரண்டிச் செல்கிறார்கள்.ஆனாலும் இலங்கை கடற்படையால் இவர்களை கைது செய்ய முடியும். இலங்கை கடற்படை இவர்களை கைது செய்யாதது எங்களுக்கு வருத்தத்தை தருகிறது.

இந்த காலப்பகுதியில் வடமராட்சி கிழக்கு மற்றும் முல்லைத்தீவு கடற்பகுதிகளில் இரால் அதிகமாக உற்பத்தியாகி பிடிக்கப்படுகின்ற காலம்.இதனை அவர்கள் நன்கு அறிந்து அத்துமீறி நுழைந்து எங்களுடைய கடற்றொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்தை அழித்து செல்கிறார்கள் இந்த விடயங்கள் சம்பந்தமாக, அத்துமீறி நுழையும் இந்திய இழுவைமடி படகுகளை கட்டுப்படுத்த வேண்டியது தொடர்பாக கடந்த 2ஆம் தேதி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை.

இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளால் பாமர மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.வருகின்ற இரண்டாம் திகதி பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்காக இலங்கையினுடைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவிருக்கிறார்.

இங்கே வந்து பொங்கல் தினத்தை அவர் மகிழ்ச்சியாக கொண்டாடப் போகின்றார்.ஆனால் எங்களுடைய வடக்கு கடற்றொழிலாளர்கள் திண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.ஜனாதிபதி பொங்கல் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடப் போகின்றார் ஆனால் எங்களுடைய கடற்றொழிலாளர்கள் எப்படி பொங்கல் தினத்தை கொண்டாடுவது?

உடனடியாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்து இந்திய இழுவைமடி படகுகளின் அத்துமீறலை கட்டுப்படுத்த வேண்டும் இல்லை என்று சொன்னால் எங்களுடைய கடற்றொழிலாளர்கள் இந்த போராட்டங்களை வருகின்ற காலங்களில் விஸ்தரிப்பார்கள்.

இலங்கை தமிழர்களும் இந்திய தமிழர்களும் ஒன்று சேர்ந்தால் தமிழர்களின் பலம் கூடிவிடும் என்பதற்காகத்தான் இரு நாட்டு கடற்றொழிலாளர்களையும் சண்டையிடவைத்து வேடிக்கை பார்ப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது இனிவரும் காலங்களில் அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்களை எதிர்த்து கடலில் இறங்கி போராட வேண்டிய ஒரு நிலைமைக்கு வரும் ஆகவே உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து இந்திய இழுவைமடி படகுகளை கட்டுப்படுத்துமாறு முரளிதரன் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

திருப்பெருந்துறையில் திண்மக்கழிவு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க விசேட குழு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழுவின் மூலம் குறித்த பகுதிக்கு…

65 0 0
இலங்கை செய்திகள்

மஸ்கெலியா பிரதேச சபைக்கு 3 புதிய பாலங்களுக்கான வாய்ப்பு!

உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் வகையில், ஒவ்வொரு பிரதேச சபைக்கும் உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுகீட்டில் மூன்று பாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மஸ்கெலியா பிரதேச…

61 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் உயிரைக் காக்க பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞன் அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது…

73 0 0
இலங்கை செய்திகள்

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் Bachelor of Information & Communication Technology (BICT) பட்டப்படிப்பின் பரீட்சை…

51 0 0