உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தனங்களப்பு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
22 பார்வைகள்

யாழ்.சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

தனங்களப்பு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சாவகச்சேரி பொலிஸார் விரைந்தனர்.இதன்போது இரு டிப்பர் வாகனங்கள், இரு உழவு இயந்திரங்கள், மண் அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய பொலிஸார் இருவரை கைது செய்தனர்.

கைதானவர்களையும், சான்றுப் பொருட்களையும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

76 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

79 0 0