உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தையிட்டி விகாரை விவகாரத்தில் தமிழ் மக்களின் உறுதிப்பாடு அவசியம் – அ.யோதிலிங்கம்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
36 பார்வைகள்

தையிட்டி விகாரை அகற்றப்படும் வரை நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பது தமிழ் மக்கள் அனைவரினதும் கடமையாகும் என அரசியல் ஆய்வாளரும் சட்டதரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.அவர் இன்று வெளியிட்டுள்ள அரசியல் ஆய்வு கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கட்டுரையில்,”தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் மக்கள் மயமாதல் என்ற நிலையிலிருந்து சர்வதேசமயமாதல் என்ற நிலையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.லண்டனிலும், தமிழ்நாட்டிலும் இது தொடர்பாக கண்டன போராட்டங்கள் இடம்பெற்றுள்ளது. கனடாவில் போராட்டத்திற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

தாயகத்தில் போராட்ட சூழல் அதிகரிக்கும்போது தமிழ்நாட்டின் ஏனைய இடங்களிற்கும், பிரான்ஸ், ஜேர்மனி, டென்மார்க், அவுஸ்ரேலியா போன்ற புலம்பெயர் மக்கள் வாழும் நாடுகளிற்கும் போராட்டம் பரவலாம்.

எல்லாவற்றிற்கும் முக்கியம் தாயகத்தில் இப் போராட்ட சூழலை அணைய விடாமல் வைத்திருப்பது தான். தாயகத்தில் தற்போது சகல மட்டங்களிற்கும் பரவத் தொடங்கியுள்ளது.நீதிமன்றங்களில் இதன் சகல பரிமாணங்களும் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. மூன்று சட்டத்தரணிகளும் வெவ்வேறு கோணங்களில் இதனை விவாதத்திற்குள்ளாக்கியுள்ளனர்.

சுமந்திரன் சட்ட விரோத கட்டிடத்தை அகற்றும் அதிகாரம் பிரதேச சபைக்குரியது சட்டத்தை நடைமுறைப்படுத்த முனையும் போது பொலிசார் சட்ட விரோதமாக நடந்து கொள்கின்றார்கள் என்ற வகையில் விவாதத்தினை கொண்டு சென்றார்.

சட்டத்தரணி சிறீகாந்தா அரசாங்கம் மாறினாலும் அமைதிவழி போராட்டக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறை மாறவில்லை என்ற வகையில் விவாதத்தினை கொண்டு சென்றார்” என குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

திருப்பெருந்துறையில் திண்மக்கழிவு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க விசேட குழு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழுவின் மூலம் குறித்த பகுதிக்கு…

58 0 0
இலங்கை செய்திகள்

மஸ்கெலியா பிரதேச சபைக்கு 3 புதிய பாலங்களுக்கான வாய்ப்பு!

உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் வகையில், ஒவ்வொரு பிரதேச சபைக்கும் உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுகீட்டில் மூன்று பாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மஸ்கெலியா பிரதேச…

56 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் உயிரைக் காக்க பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞன் அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது…

67 0 0
இலங்கை செய்திகள்

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் Bachelor of Information & Communication Technology (BICT) பட்டப்படிப்பின் பரீட்சை…

43 0 0