உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தெஹிவளை, கடற்கரை வீதியில் விடுதி உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் – காரணம் வெளியானது!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
41 பார்வைகள்

தெஹிவளை, கடற்கரை வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவமானது இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் விளைவு என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (09) இரவு 9.10 மணியளவில் தெஹிவளைப் பகுதியில் விடுதி உரிமையாளர் மீது இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில், தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய “சனா மாமா” என அழைக்கப்படும் ஏ.டி. சனத் பாலசூரிய ஆரச்சி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற போது விடுதியினுள் மதுபானம் அருந்திக்கொண்டிருந்தவர்களில் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட நபர், பாதாள உலகக் குழு உறுப்பினரரும் போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் “சூவா சமந்த” (Chuwa Samantha) என்பவரின் நெருங்கிய சகா என்பது தெரியவந்துள்ளது.மற்றொரு போதைப்பொருள் கடத்தல்காரரான “படோவிட்ட அசங்க” (Badovita Asanka) மற்றும் “சூவா சமந்த” ஆகியோரிடையே நீண்டகாலமாக நிலவி வந்த போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான பகையே இக்கொலைக்குக் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, படோவிட்ட அசங்கவின் தரப்பினரே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.இருப்பினும், கொலை செய்யப்பட்ட “சனா மாமா” என்ற சனத் என்பவருக்கு இதற்கு முன்னர் எவ்வித உயிர் அச்சுறுத்தல்களும் இருந்திருக்கவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் தெஹிவளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

திருப்பெருந்துறையில் திண்மக்கழிவு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க விசேட குழு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழுவின் மூலம் குறித்த பகுதிக்கு…

58 0 0
இலங்கை செய்திகள்

மஸ்கெலியா பிரதேச சபைக்கு 3 புதிய பாலங்களுக்கான வாய்ப்பு!

உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் வகையில், ஒவ்வொரு பிரதேச சபைக்கும் உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுகீட்டில் மூன்று பாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மஸ்கெலியா பிரதேச…

56 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் உயிரைக் காக்க பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞன் அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது…

67 0 0
இலங்கை செய்திகள்

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் Bachelor of Information & Communication Technology (BICT) பட்டப்படிப்பின் பரீட்சை…

43 0 0