உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சிறையில் இருந்து வெளியே வந்த டக்ளஸ் அநுரவுக்கு கூறிய செய்தி.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
62 பார்வைகள்

சிறையில் இருந்து பிணையில் வெளியில் வந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா ஜனாதிபதி அநுர குமாரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.மேலும், எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும் எனவும், என்னை திடீரென கைது செய்ததன் காரணமாக எனது மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் கவலையை என்னால் உணர்ந்துகொள்ள முடிகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும், “இன்று நான் விடுவிக்கப்பட்டிருக்கின்றேன்.

அந்தவகையில், எனது மக்களும் அதிலிருந்து விடுவிக்கப்பட்ட எனக்கு பல வழிகளிலும் தமது உணர்வுகளை எனக்கு வெளிப்படுத்தியுள்ளனர்” என்றும் தெரிவித்துள்ளார்.அத்துடன், நாட்டினுடைய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்காவிற்கு நன்றி தெரிவிக்கும் அதே சமயத்தில், எனது தரப்பு உண்மைகளை எடுத்துரைத்த சிரேஸ்ட ஜனாதிபதி சட்டத்தரணி சாலிக பீரிஸ் மற்றும் அவரின் குழுவினருக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமன்றி, நியாயங்களை உணர்ந்து கொண்ட கம்பஹா மாவட்ட நீதிபதிக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காக அவர் கடந்த மாதம் 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு, நேற்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

திருப்பெருந்துறையில் திண்மக்கழிவு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க விசேட குழு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழுவின் மூலம் குறித்த பகுதிக்கு…

58 0 0
இலங்கை செய்திகள்

மஸ்கெலியா பிரதேச சபைக்கு 3 புதிய பாலங்களுக்கான வாய்ப்பு!

உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் வகையில், ஒவ்வொரு பிரதேச சபைக்கும் உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுகீட்டில் மூன்று பாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மஸ்கெலியா பிரதேச…

56 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் உயிரைக் காக்க பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞன் அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது…

67 0 0
இலங்கை செய்திகள்

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் Bachelor of Information & Communication Technology (BICT) பட்டப்படிப்பின் பரீட்சை…

43 0 0