உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சிறைக் கைதியிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
41 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் சக கைதியை ஊசியால் குத்திய தண்டனைக்காக மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறைக் கைதியிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைதியை நேற்று முன்தினம் (07.01.2026) இரவு சோதனை செய்த மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளே இவ்வாறு போதைப்பொருள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இதன்போது, 128 மில்லிகிராம் ஜஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கிருலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை குற்றச் செயல் ஒன்றின் காரணமாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த கைதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது, சக கைதி ஒருவரை ஊசியால் குத்தி தாக்கியுள்ளார். அதன் பின்னர், குறித்த கைதியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய வேளையில், நீதவான் அவரை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளார். அங்கிருந்து, சிறைச்சாலை பேருந்தில் ஏற்றப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு நேற்றுமுன் தினம் (07) கொண்டு வரப்பட்டுள்ளார்.

இவ்வாறு கொண்டு வரப்பட்டவரை சிறைச்சாலைக்குள் அழைத்துச் செல்வதற்கு முன்னர் சிறைச்சாலை அதிகாரிகள் அவரை சோதனையிட்ட போது அவரின் உடைமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 128 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சோதனை நடவடிக்கையின் பின்னர், குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று(08) முன்னிலைப்படுத்திய போது, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த நபர் நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் கூடத்தில் தடுத்து வைத்திருந்த போது அவரை பார்ப்பதற்காக வந்த உறவினர்கள் போதைப்பொருளை வழங்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தனியார் மருத்துவமனைக்குச் செல்ல ஷிரந்தி ராஜபக்சவுக்கு அனுமதி மறுப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவை இன்று கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை இடம்பெறாது என சிறைச்சாலை…

27 0 0
இலங்கை செய்திகள்

ஊழல் எதிர்ப்பு (திருத்தம்) சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

திருத்தங்களுடன் கூடிய ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக, ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.…

73 0 0
இலங்கை செய்திகள்

சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கான விதிமுறைகளைத் திருத்த புதிய குழு

சிறையில் உள்ள பௌத்த துறவிகள் தங்கியிருக்கும் விதம் மற்றும் அவர்களைச் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும் முறைமைகள் தொடர்பான தற்போதைய சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான கட்டளைகள்…

61 0 0
இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

78 0 0