உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழர்களின் விபரங்களை பதிவு செய்த பொலிஸார்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
45 பார்வைகள்

தமிழர்களுக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்ட இராணுவ ஆதரவு பெற்ற தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான மாதாந்த போராட்டத்திற்கு வந்த வாகனங்கள் மற்றும் வாகன உரிமையாளர்களின் விபரங்களை சேகரிக்க பொலிஸாரின் முன்னெப்போதும் இல்லாத முயற்சி, உள்ளூர் தமிழ் ஆர்வலர்களிடையே சாத்தியமான அடக்குமுறைகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விகாரை அமைக்கப்பட்ட தமது காணியை மீளத் திருப்பித் தரக் கோரி போயா தினத்தன்று திஸ்ஸ விகாரைக்கு போராட்டத்திற்கு வந்த வாகனங்களின் இலக்கத்தகடுகள் மற்றும் சாரதிகளின் சாரதி அனுமதிப் பத்திரங்களை பொலிஸார் பதிவு செய்ததாக தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் சிவகுரு ஆதீனத்தை சேர்ந்த தவத்திரு வேலன் சுவாமி புத்தாண்டின் முதல் போயா நாளில் விகாரை முன்பு நடந்த போராட்டத்தில் பங்கேற்க முச்சக்கர வண்டியில் வந்தார். அதன் இலக்கத் தகடு மற்றும் சாரதியின் சாரதி அனுமதிப் பத்திர விவரங்களை பொலிஸார் பதிவு செய்தனர்.

வேலன் சுவாமி பொலிஸாரிடம் பதிவுக்கான காரணங்கள் குறித்து கேட்டபோது, சீருடையில் இருந்த ஒரு அதிகாரி, ‘ஆர்ப்பாட்டம் நடக்கிறது தானே ஐயா, ஆகவே போற எல்லா வாகனத்தையும் எழுத சொல்லி சொல்லியிருக்கின்றார்கள். அவ்வளவுதான் வேறு எதுவும் இல்லை,” என பதிலளித்தார்.

நாட்டில் எந்த இடத்திற்கும் பயணிக்க மக்களுக்கு உரிமை உண்டு எனவும், பொலிஸார் இவ்வாறு தடுத்து வைத்து விசாரணை செய்வது எதற்காக எனவும் கேட்டபோது, மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே தாம் அதைச் செய்வதாக பொலிஸார் கூறியிருந்தனர்.

வேலன் சுவாமி, பொலிஸார் மக்களைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டே அவர்களைத் துன்புறுத்துவதாகவும், பின்னர் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸ் அதிகாரிகளிடம் கூறியிருந்தார்.

பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி மக்களை வேறொரு நேரத்தில் அடக்குமுறைக்கு உள்ளாக்கும் நோக்கம் பொலிஸாருக்கு காணப்படுவதாக தான் நம்புவதாக போராட்டத்தில் கலந்து கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்திருந்தார்.

“பலரிடம் தேசிய அடையாள அட்டையை விட அவர்களுடைய சாரதி அனுமதிப் பத்திரத்தை பதிவு செய்துள்ளார்கள். இதற்கு பின்னால் ஒரு உள்நோக்கம் இருக்கிறது. சாரதி அனுமதிப்பத்திரம், அதனைவிட அவர்களுடைய வாகனம். ஆகவே அவர்கள் என்னென்ன வாகனத்தை பயன்படுத்த போகிறார்களோ, அவர்களை வேறு இடங்களில் வைத்து தாக்குதல் நடத்தும் நோக்கம் என்று நாங்கள் கருதுகின்றோம்.”

போராட்டம் நடத்திய மக்கள் ஆளில்லா விமான கமராக்கள் (ட்ரோன்) மூலம் கண்காணிக்கபட்டதாக போராட்டத்தில் பங்கேற்ற வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தலைவர் தியாகராஜா நிரோஷ் குற்றம் சாட்டியிருந்தார்.

“இலங்கையில் இருக்கும் நடைமுறைகளுக்கு மேலதிகமாக ட்ரோன் கமராக்கள் ஊடாக போராட்டக்காரர்கள் கண்காணிக்கப்பட்டனர்.

போராட்டத்திற்கு வந்த ஒவ்வொரு பிரஜையின் தகவல்களும் பதிவு செய்யப்பட்டன.”

திஸ்ஸ விகாரை கட்டப்பட்டுள்ள தமது காணியை விடுவிக்கக் கோரி 2023ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் திஸ்ஸ விகாரை அருகே போராட்டம் நடத்தி வரும் தமிழர்கள், விகாரை அமைப்பதற்கு 16 தமிழ் குடும்பங்களுக்கு சொந்தமான சுமார் 8.5 ஏக்கர் காணியை இராணுவம் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

73 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

65 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

60 0 0