உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சிகரெட் பில்டரை தடை செய்ய எடுக்கப்படும் நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
65 பார்வைகள்

சிகரெட் பில்டரை தடை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக அரசு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு ஆகியவற்றுடன் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அழிவடையாத கழிவுப் பொருட்களில் ஒன்றான சிகரெட் பில்டர்களை தடை செய்வது குறித்து தங்களின் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிகாரசபையின் தலைவர் டாக்டர் ஆனந்த ரத்நாயக்கவும் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில், ஒவ்வொரு நாளும் சுமார் ஆறு மில்லியன் சிகரெட் பில்டர்கள் சுற்றுச்சூழலில் சேர்கின்றன.

இது நாட்டின் உக்காத கழிவுப் பொருட்களில் ஒரு பெரிய பகுதியாகும். குறிப்பாக நீர் நிலைகளில் தேங்கும் சிகரெட் பில்டர்களால் ஏற்படும் தீங்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு (2025) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற 11வது புகையிலை கட்டுப்பாடு மாநாட்டில், நாட்டில் சிகரெட் பில்டர்களை தடை செய்வதற்கான சர்வதேச சமூகத்தின் முன்மொழிவை இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளதோடு தூய்மையான இலங்கை திட்டத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தவும் ஒப்புக் கொண்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

83 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

88 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

69 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர்…

79 0 0