இன்று காலை முல்லைத்தீவு நகரில், செலான் வங்கியின் முன்பாக உள்ள RDD வீதியில் ஒரு புளியமரம் சரிந்து விழுந்ததனால் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்தது.
RDD பணியாளர்கள், பிரதேச சபை பணியாளர்கள், மின்சார சபை பணியாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவுடன் இணைந்து உடனடியாக விழுந்த மரத்தை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் SLT கம்பங்கள் சேதமதந்துள்ளதுடன் SLT தொலைபேசி கம்பங்கள் உடைந்து, வீதியில் கிடப்பதால் வீதியில் வாகனங்களின் பயணம் அபாயகரமானதாக காணப்படுகிறது.
SLT குழு விரைவில் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வரை பாதுகாப்பு காரணங்களுக்காக மோட்டார் கார்கள், வான்கள், லொறிகள் போன்ற எந்தவொரு பெரிய வாகனங்களும் இந்தச் வீதியை பயன்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது மோட்டார் சைக்கிள்கள், மற்றும் மிதிவண்டிகள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.















