முல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலய அதிபரின் ஓய்வூதியத்திற்கு எதிராக பிரதம மந்திரி செயலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த அதிபரின் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய பாடசாலை சேவைக்காலத்தில் தாய், தந்தையை இழந்த மாணவனுக்கு யோகா அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்ட நிதி மோசடி, பாடசாலை அபிவிருத்தி சங்க கணக்கில் வைப்பில் இடப்பட்டதென காட்டப்பட்ட தொகை வைப்பிலிடப்படாமை, அதிக காசோலைகள் பாடசாலை சிற்றூழியர் மற்றும் ஆசிரியர்களின் பெயரில் எழுதி மாற்றப்பட்டமை, எந்த ஒரு காசு பெறுவதற்கும் பற்றுச்சீட்டு வழங்கப்படாமை போன்ற மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
தற்போதைய விசுவமடு ம.வி பாடசாலை சேவைக் காலத்தில் பாடசாலையுடன் சம்பந்தம் இல்லாத விசுவநாதர் நிதியத்தின் ஊடாக பாடசாலைக்கு நிதி சேகரித்தமை, திணைக்களத்தின் அனுமதி இல்லாமல் காணொளி வாயிலாக நிதி சேகரித்தமை போன்ற முறைகேடுகளை செய்துள்ளதாக தெறிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இவரின் ஓய்வூதியம் நிறுத்தப்படவேண்டும் என பிரதமர் செயலகம், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, வடமாகாண ஆளுநர் செயலகம், ஓய்வூதிய திணைக்களம், வடமாகான பிரதம செயலாளர் செயலகம், தேசிய கணக்காய்வு நிறுவனம், முல்லைத்தீவு அரச அதிபர் செயலகம், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடமாகாண மாகாண கல்விப் பணிப்பாளர், முல்லைத்தீவு வலயக் கல்வி பணிமனை போன்றவற்றிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.













