வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் நேற்றையதினம் காலை வீட்டில் இருந்துள்தாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் தாயார் பணி நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது தனது மகள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த இ.சிந்துஜா எனும் 25 வயதுடைய என்ற ஒரு பிள்ளையின் தாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தின் கழுத்து பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமையால் குறித்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை பெண்ணின் கணவரும் பொலிஸில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.














