• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

சர்வதேச நீதி கோரிய பேரணிக்கு வலுச்சேர்க்க அனைவரும் ஆதரவு தாருங்கள்.!

Mathavi by Mathavi
August 25, 2025
in இலங்கை செய்திகள், மன்னார் செய்திகள்
0
சர்வதேச நீதி கோரிய பேரணிக்கு வலுச்சேர்க்க அனைவரும் ஆதரவு தாருங்கள்.!
Share on FacebookShare on Twitter

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று திங்கட்கிழமை (25) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச நீதி கோரி வடக்கு, கிழக்கில் மக்கள் எழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கில் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவிற்கு முன்பாகவும், கிழக்கில் மட்டக்களப்பிலும் முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கில் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவிற்கு முன்பு எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 10 மணிக்கு பேரணி ஆரம்பமாகி செம்மணி வரை குறித்த பேரணி இடம்பெற உள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து உலக நாடுகள் தமது கவனத்திற்கொண்டு சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து குறித்த பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த 14 வருடங்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் வீதிக்கு இறங்கி எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்து வந்தோம்.

சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் எமக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை.

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நூற்றுக்கணக்கான உறவுகள் எலும்புக் கூடுகளாக மீட்கப்படுகின்றனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்று இதுவரை எமக்கு தெரியவில்லை.

எமது பிள்ளைகள், உறவுகள் எங்கேயோ இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம்.

எனவே எமக்கு சமூக செயல்பாட்டாளர்கள், தேசியத்தை நேசிக்கும் அனைவரும் எமக்கு குரல் கொடுக்க அணி திரண்டு வர வேண்டும். நாங்கள் தனித்து போராடுகின்றமையினாலேயே எமக்கு நீதி கிடைக்கவில்லை என்கிற தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையிலே எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் சர்வதேச நீதி கோரிய மக்கள் எழுச்சிப் பேரணியை முன்னெடுக்கவுள்ளது.

எனவே அனைத்து உறவுகளும் எமது சர்வதேச நீதி கோரிய போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts

போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது.!

போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது.!

by Mathavi
July 10, 2026
0

அனுராதபுரம், விஜேபுர பகுதியில் 5 கிராமிற்கும் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருளுடன் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் அனுராதபுரம் வலய மது ஒழிப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்....

தமிழரின் நகைகளை மீட்டுத் தாருங்கள்.!

தமிழரின் நகைகளை மீட்டுத் தாருங்கள்.!

by Mathavi
July 10, 2026
0

இறுதி யுத்தத்தின் போது தமிழர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசு வெளிப்படையான விசாரணை நடத்த...

டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட 8 PHI அதிகாரிகளுக்கு டெங்கு உறுதி!

டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட 8 PHI அதிகாரிகளுக்கு டெங்கு உறுதி!

by selvan
July 9, 2026
0

டெங்கு ஒழிப்புப் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்து வரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 8 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு டெங்கு நோய் தொற்றியுள்ளது. இன்று (09)...

திடீரென ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

திடீரென ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

by selvan
July 9, 2026
0

சட்டபூர்வமான வருமான வழிமுறைகள் ஏதுமின்றி, திடீரென ஈட்டப்பட்ட பெருமளவிலான சொத்துக்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள நபர்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID) தங்களும்...

சிறைச்சாலைக் கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிக்கு கொ*லை மிரட்டல்!

by selvan
July 9, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது, கைதிகள் சிறை வாசலை உடைத்துக்கொண்டு வெளியே தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு, கலவரத்தில் ஈடுபட்ட...

ஐக்கிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் கைது!

ஐக்கிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் கைது!

by selvan
July 9, 2026
0

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் காத்தான்குடி நகர சபைக்கு தேசிய பட்டியல் ஊடாக உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நகர சபை உறுப்பினர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில்...

பாடசாலையில் சிறுமியை கொடூரமாக அறைந்த ஆசிரியை – சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!

பாடசாலையில் சிறுமியை கொடூரமாக அறைந்த ஆசிரியை – சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!

by selvan
July 9, 2026
0

மன்னாரில் உள்ள பிரபல பெண்கள்  பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்கும் சிறுமி ஒருவர், வகுப்பாசிரியரால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் , அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம்...

ஆட்சியாளர்களின் இயலாமையை மறைக்கவே சிறைச்சாலைக் குழப்பங்கள் – அருள் ஜெயந்திரன் சந்தேகம்!

by selvan
July 9, 2026
0

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் ஆட்சியாளர்களின் மோசடிகளை மூடிமறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் சிறைச்சாலை குழப்பங்களும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றனவோ என்ற...

13ம் திகதி தொடக்கம் சிறுபோக நெற்கொள்வனவு ஆரம்பம் – சத்தியலிங்கம் எம்.பி தகவல்…!

13ம் திகதி தொடக்கம் சிறுபோக நெற்கொள்வனவு ஆரம்பம் – சத்தியலிங்கம் எம்.பி தகவல்…!

by selvan
July 9, 2026
0

எதிர்வரும் 13ம் திகதி தொடக்கம் சிறுபோக நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த அவர்கள் தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழு கூட்டம் நேற்று (08.07.2026)...

திட்டமிட்ட அவதூறுகள் பற்றி அவதானித்து வருவதாக பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு!

திட்டமிட்ட அவதூறுகள் பற்றி அவதானித்து வருவதாக பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு!

by selvan
July 9, 2026
0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்வுக்கும் அதன் சமூகப் பொறுப்புடமைக்கும் எதிரான சக்திகளால், தேசியத்தின்பால் பற்றுறுதியோடு பயணிக்கும் கல்வியாளர்கள் அனைவரும் குறிவைத்துத் தாக்கப்படும், அவதூறுகளுக்கு ஆளாக்கப்படும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுவதை...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி