இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானையுடன், 1500 பரத நாட்டிய கலைஞர்களுடன், 500 கோலங்களுடன் பொங்கலை வரவேற்கும் முகமாக மாபெரும் பொங்கல் திருவிழா கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் இன்று (08) திருகோணமலை Meckezier stadium இல் இடம்பெற்றது.
பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் சம்பூர் பிரதேசத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை கிழக்கு ஆளுநர் நடாத்தியிருந்தார்.
தமிழ் மக்களின் பாரம்பரிய வீர விளையாட்டை கிழக்கின் ஆளுநர் மீட்டெடுத்து வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இந்த விடயம், இன்று உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிற மற்றுமொரு சிறப்பம்சமாகவும், இருக்கின்ற அதேவேளை பொங்கல் தினத்தை வரவேற்கும் “பொங்கல் திருவிழா” நிகழ்வுகள் தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.