28.2 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகம் ஒன்றின் ஊழியர் உட்பட இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை (வலி நிவாரணி) விற்பனை செய்து வந்த கும்பலை இலக்காக வைத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் பிரபல மருந்தகம் ஒன்றின் ஊழியர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், பிரபல மருந்தகத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

“யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் வியாபார நோக்கத்துடன் ஆயிரத்து 100 போதை மாத்திரைகளுடன் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் பிரபல மருந்தகத்தின் ஊழியர் என விசாரணையில் தெரியவந்தது.

அதனடிப்படையில் மருந்தகத்தில் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் மேலும் இரண்டு பெட்டிகளில் சுமார் 250 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. குறித்த மாத்திரைகள் வலி நிவாரணியாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் இருவரும் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மீதும் மருந்தகம் மீதும் நாளை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலைமையிலான மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது

Related posts

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவரை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்தித்து கலந்துரையாடினார்.

sumi

வவுனியாவில் ஆசிரியை ஒருவருக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய கடுமையான உத்தரவுகள்!

User1

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா

User1

Leave a Comment